செப்டம்பர்-1 ஆம் தேதி ‘போலீஸ் தினம்’ஆக கொண்டாடப்படும் – மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவிப்பு.!
மேற்கு வங்காளத்தில் காவல்துறையினருக்கு மரியாதை செலுத்தும் வகையில் செப்டம்பர் 1ம் தேதியை போலீஸ் தினமாக கொண்டாடப்படும் என்று மேற்கு வங்காள முதல் மந்திரியான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் டாக்டர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆகிய முன்கள பணியாளர்களாக திகழ்பவர்கள் அனைவரும் தங்கள் உயிரையும் பணயம் வைத்து மக்களின் பாதுகாப்பிற்காக செயல்பட்டு வருகின்றனர்.
இச்சூழிலில் பிரச்சனைகள் ஏதும் ஏற்படாத வண்ணம் நாள் முழுவதும் உழைக்கும் காவல்துறையினருக்கு கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது மிகப் பெரிய சவாலாக உள்ளது. அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மேற்கு வங்கத்தில் வரும் செப்டம்பர் 1ம் தேதியை ‘போலீஸ் தினம்’ ஆக கொண்டாடப்படவுள்ளதாக மேற்கு வங்காள முதல் மந்திரியான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.