புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்குங்கள் – மேற்கு வங்க முதல்வர் மம்தா
மத்திய அரசு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் தீவிர பரவலை கட்டுபடுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், இந்திய முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இதில், அதிக அளவில் பாதிக்கப்பட்டது என்று பார்த்தால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தான். இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் என ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் அனைவருக்கும் ஒருமுறை உதவியாக, தலா 10 ஆயிரம் ரூபாயை நேரடி பணமாக மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும், இதற்காவது, பி.எம்.கேர்ஸ் நிதியை பயன்படுத்தலாம்.’ என்றும் பதிவிட்டுள்ளார்.