மேற்கு வங்க இடைத்தேர்தல்: பிரச்சாரகர்களின் பட்டியலை வெளியிட்டது திரிணாமுல் காங்கிரஸ்!
ஜார்க்கண்ட், திரிபுரா, கேரளா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய 6 மாநிலங்களில் உள்ள ஏழு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் செப்டம்பர் 5-ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் (இசிஐ) அறிவித்துள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் உள்ள 15-துப்குரி (எஸ்சி) சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தலுக்காக 37 பேர் கொண்ட பிரச்சாரம் செய்பவர்களின் பட்டியலை அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
AITC Star Campaigners’ List for the Bye-Election in 15-Dhupguri (SC) Assembly Constituency, West Bengal 2023. pic.twitter.com/UM8nmuVwUE
— All India Trinamool Congress (@AITCofficial) August 18, 2023