போதைப்பொருள் வழக்கில் மேற்கு வங்க பாஜக தலைவர் மற்றும் அவரது இரண்டு மகன்கள் கைது!

Default Image

போதைப்பொருள் வழக்கில் போலீசாரை பணி செய்ய  தடுத்ததற்காக தற்போது மேற்கு வங்கத்தின் பாஜக தலைவர் ராகேஷ் சிங் மற்றும் அவரது இரண்டு மகன்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விறுவிறுப்பான பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெற்கு கொல்கத்தா நகரில் உள்ள நியூ அலிப்பூர் எனும் பகுதியில் காரில் சென்ற பாஜக இளைஞரணி பொதுச்செயலாளர் பமீலா கோஸ்வாமி அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவரது கைப்பையில் இருந்த 100 கிராம் எடை கொண்ட கோகைன் எனும் லட்சக்கணக்கான மதிப்புள்ள போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்ததுடன், கோஸ்வாமியையும் கைது செய்தனர். போதை பொருள் கடத்தலில் கோஸ்வாமி தொடர்ச்சியாக ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததால் தான் அதிரடியான இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் பின் அவருடன் சென்ற அவரது நண்பர் பிரதீப் குமார் என்பவரும் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கோஸ்வாமி கார் நிறுத்தும் இடத்தில் உள்ள 8 வாகனங்களில் போலீசார் நடத்திய சோதனையின் அடிப்படையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வருகிற 25ஆம் தேதி வரை கோஸ்வாமிக்கு போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் மேற்கு வங்க பாஜக தலைவர் ராகேஷ் சிங் அவர்கள் குறுக்கீட்டு இந்த வழக்குக்கு எதிராக இடைக்கால தடை கேட்டு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தக்கல் செய்துள்ளார். இதனையடுத்து போலீஸ் விசாரணையில் குறுக்கிட்டதற்காக மேற்கு வங்கத்தின் பாஜக தலைவர் ராகேஷ் சிங் மற்றும் அவரது இரண்டு மகன்களை, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததற்காக கைது செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்