வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற மம்தா பானர்ஜி முடிவு

வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு மீது மேலும் அழுத்தம் கொடுக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதற்கு எதிராக மாநில சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற முடிவு செய்துள்ளார்.
மத்திய அரசின் சார்பில் வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.இந்த மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.இதைத்தொடர்ந்து இவைகள் சட்டமாக மாறின.ஆனால் இதற்கு எதிராக டெல்லியில் விவசாய அமைப்புகள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றன.இந்த சட்டத்திற்கு எதிராக ஒரு சில மாநிலங்கள் தீர்மானமும் கொண்டு வந்துள்ளன.
இந்நிலையில் வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு மீது மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதற்கு எதிராக மாநில சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற முடிவு செய்துள்ளார்.ஏற்கனவே மூன்று வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வர் பானர்ஜி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025
வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
April 25, 2025