ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கியதற்கு ட்விட்டரில் டாடா குழும கவுரவ தலைவர் ரத்தன் டாடா வரவேற்பு.
நஷ்டத்தில் இயங்கி வந்த இந்திய அரசின் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 68 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடா நிறுவனத்தின் வசமாகியுள்ளது.
டாடா குழுமத்திற்கு ஏர் இந்தியா நிறுவனம் ரூ.18,000 கோடிக்கு விற்கப்பட்டதாகவும், ஏர் இந்தியாவை தனியார் மயமாக்கலை மத்திய அமைச்சர்கள் குழு இறுதி செய்ததாகவும் மத்திய அரசு செயலாளர் தெரிவித்துள்ளார். ரூ.70,000 கோடி நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனம் தனியார்மயமாக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியாவின் ரூ.15,300 கோடி கடனையும் டாடா நிறுவனம் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், ஏர் இந்தியா விமான நிறுவனத்தை, டாடா குழுமம் வாங்கியதற்கு டாடா குழும கவுரவ தலைவர் ரத்தன் டாடா தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், ஏர் இந்தியாவே மீண்டும் வருக என்று தெரிவித்த அவர், ஜே.ஆர்.டி.டாடா தலைமையின் கீழ் மிகவும் கவுரவும், மரியாதையும் பெற்றிருந்த ஏர் இந்தியாவை மீண்டும் அதே நிலைக்கு கொண்டு வருவோம் என்றும் ஏர் இந்தியாவை தனியார்மயமாக்கிய மத்திய அரசின் கொள்கை முடிவை வரவேற்கிறோம் எனவும் கூறியுள்ளார்.
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…
சென்னை : நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடக்கிறது.…
சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். வயது மூப்பு காரணமாக…
டொமிங்கோ : டொமினிகன் குடியரசின் தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் உள்ள ஒரு பிரபலமான ஜெட் செட் இரவு விடுதியின் கூரை…