வார விடுமுறை வெள்ளிக்கிழமை.! 33 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பிய அரசு அதிகாரிகள்…
ஜார்கண்ட் மாநிலத்தில் குறிப்பிட்ட 33 பள்ளிகளில் ஞாயிற்று கிழமை விடுமுறை அளிக்காமல் வெள்ளிக்கிழமை விடுமுறை அளித்துள்ளனர்.
இந்தியா முழுவதும் பள்ளி கல்லூரிகள் மட்டுமின்றி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு கூட ஞாயிற்று கிழமை தான் பொது விடுமுறையாக உள்ளது.
ஆனால், ஜார்கண்ட் மாநிலத்தில், தும்கா எனும் நகரில் செயல்பட்டு வந்த பள்ளிகளில் 33 பள்ளிகளில் ஞாயிற்று கிழமை விடுமுறை அளிக்காமல் வெள்ளிக்கிழமை விடுமுறை அளித்துள்ளனர்.
இந்த விவகாரம் தற்போது சர்ச்சையாகி உள்ளது. இதனை தொடர்ந்து கல்வி அதிகாரிகள் அந்த பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளனர். மேலும் அங்கு உருது மொழியும் கற்பிக்கப்பட்டு வந்ததாக ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.