இந்திய துணை ராணுவ பிரிவுகளில் இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படையினர். இந்தியா-சீனாஎல்லையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த பணியில் 90,000 வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதில் திருமணமாகாத 2,500ஆண்களும் , 1,000 பெண்களும் பல்வேறு பணிகளில் பணியாற்றி வருகின்றனர். ஆபத்தான இடங்களில் பணியாற்றி வரும் இவர்களுக்கு வரன் தேடுவது இவர்களின் குடும்பத்தினருக்கு சிரமமாக உள்ளது என கூறுகின்றனர்.
இதனால் பல வீரர்களுக்கு வயது அதிகரித்தே செல்கிறது என இந்தோ-திபெத் எல்லைப்படை உயர் அதிகாரிகளுக்கு கவலை அளித்து உள்ளது.இந்நிலையில் தங்கள் படைக்குள்ளேயே தங்களுக்கு பொருத்தமான ஜோடியை தேர்ந்துதெடுக்கும் வகையில் ஒரு திருமண வெப்சைட்டை உருவாக்கும் படி தொழில் நுட்ப பிரிவிடம் இயக்குனர் ஜெனரல் தேஸ்வல் கூறினார் .
கடந்த 9-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட இந்த தளத்தில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். இதில் வீரர் மற்றும் வீராங்கனைகளின் பதவி ,சொந்த ஊர் , எப்போது பணியில் சேர்ந்தனர் ,தற்போது எங்கு வேலை செய்து வருகின்றனர் , புகைப்படம் மற்றும் அனைத்து தகவல்களும் உள்ளது. மேலும் இதில் மோசடிக்கு இடமிருக்காது என உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…