வரலாற்றில் முதல் முறையாக துணை ராணுவ வீரர்களுக்காக திருமண வெப்சைட் .!

Default Image
  • இந்திய துணை ராணுவ பிரிவுகளில் திருமணமாகாத  2,500ஆண்களும்  , 1,000பெண்களும் பல்வேறு பணிகளில் பணியாற்றி வருகின்றனர்.
  • தங்கள் படைக்குள்ளேயே பொருத்தமான ஜோடியை தேர்ந்துதெடுக்க ஒரு திருமண வெப்சைட்டை உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்திய துணை ராணுவ பிரிவுகளில் இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படையினர். இந்தியா-சீனாஎல்லையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.  இந்த பணியில் 90,000 வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இதில் திருமணமாகாத  2,500ஆண்களும் , 1,000 பெண்களும் பல்வேறு பணிகளில் பணியாற்றி வருகின்றனர். ஆபத்தான இடங்களில் பணியாற்றி வரும் இவர்களுக்கு வரன் தேடுவது இவர்களின் குடும்பத்தினருக்கு சிரமமாக உள்ளது என கூறுகின்றனர்.

இதனால் பல வீரர்களுக்கு வயது அதிகரித்தே செல்கிறது என இந்தோ-திபெத் எல்லைப்படை உயர் அதிகாரிகளுக்கு கவலை அளித்து உள்ளது.இந்நிலையில் தங்கள் படைக்குள்ளேயே தங்களுக்கு பொருத்தமான ஜோடியை தேர்ந்துதெடுக்கும் வகையில் ஒரு திருமண வெப்சைட்டை உருவாக்கும் படி தொழில் நுட்ப பிரிவிடம் இயக்குனர் ஜெனரல் தேஸ்வல் கூறினார் .

கடந்த 9-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட இந்த தளத்தில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். இதில் வீரர் மற்றும் வீராங்கனைகளின்  பதவி ,சொந்த ஊர் , எப்போது பணியில் சேர்ந்தனர் ,தற்போது எங்கு வேலை செய்து வருகின்றனர் , புகைப்படம் மற்றும் அனைத்து தகவல்களும் உள்ளது.  மேலும் இதில் மோசடிக்கு இடமிருக்காது என உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்