கொரோனாவால் இதுவரை 5 லட்சம் திருமணங்களுக்கும் ‘நோ’! முதலிரவுக்கும் ‘நோ’!

Default Image

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை நடவடிக்கை காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் இதுவரை சுமார் 5 லட்சம் திருமணங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன என ஒரு தகவல் பரவி வருகிறது. 

கொரோனா தொற்றால் பிறப்பிக்கப்பட்டடுள்ள ஊரடங்கால் லட்சக்கணக்கான திருமணங்கள் இதுவரை தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இதனால் புதுமண வாழ்வில்நுழைய கனவு கண்ட இளம் ஜோடிகள் தங்கள் திருமணம் தள்ளிபோன ஏக்கத்தில் இருக்கின்றனர்.

குஜராத்தில் ஊரடங்கு காலத்தில் மட்டும் சுமார் 30 லட்சம் திருமணங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளனவாம். அதேபோல பஞ்சாபிலும் சுமார் 30 லட்சம் திருமணங்கள் ஊரடங்கு காலத்தில் தள்ளிவைக்கப்பட்டு டிசம்பர், ஜனவரி மாதங்களில் திருமண தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது என பஞ்சாப் ஓட்டல், விடுதி சங்க செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.  

ஊரடங்கு காலத்தில் விதிக்கப்பட்டுள்ள கடுமையான தளர்வுகலாளே இந்த திருமணம் தள்ளிவைக்கபட்டுள்ளதாக  ஒரு தரப்பின்னர் கூறி வருகின்றன. இதுவரை இந்தியா முழுவதும் ஊரடங்கால் சுமார் 5 லட்சம் திருமணங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

தாலி கட்டிய சில மணிநேரங்களிலேயே மணமகளுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு, புதுமணத்தம்பதிக்கு முதலிரவு கூட நடக்கவிடாமல் மணமக்கள் தனிமைப்படுத்தப்பட்ட சோகம் இந்தியாவில் நடந்துள்ளது. 

திருமணம் தள்ளிப்போனதால் விரக்தியில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு பெண், ,மணமகன் வீட்டிற்கு 80 கிமீ தூரம் நடந்தே சென்றுள்ள சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. இன்னும் இந்த கொரோனா எத்தனை பேரின் திருமண கனவுகளை வீணடிக்க காத்திருக்கறதோ தெரியவில்லை. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்