பாஜகவை சேர்ந்த கர்நாடக அமைச்சர் ஸ்ரீராமுலு தனது மகளின் திருமணத்தை ரூபாய் 500 கோடி செலவில் தொடர்ந்து 9 நாட்களுக்கு நடத்த திட்டமிட்டுள்ளார். திருமணத்திற்காக ஒரு லட்சம் திருமண அழைப்பிதழ் அச்சடிக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தத் திருமணத்திற்கு சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி ,, உள்துறை அமைச்சர் உள்ளிட்ட முன்னணி தலைவர்களும் கர்நாடக அரசியல் முன்னணி தலைவர்களும் அழைக்கப்பட உள்ளனர். பெங்களூர் பேலஸ் மைதானத்தில் 40 ஏக்கர் நிலம் திருமணத்திற்காக பயன்ப்பட உள்ளது. இதுதவிர 27 ஏக்கர் நிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளும் ,15 ஏக்கர் நிலத்தில் வாகனங்கள் நிறுத்தவும் பயன்பட உள்ளது.
அமைச்சர் ஸ்ரீராமுலு தனது மகளின் ஒப்பனை செய்ய தீபிகா படுகோனின் மேக்கப் மேனை அழைக்க உள்ளார். அதுமட்டுமல்லாமல் அம்பானி மகள் ஈஷாவின் திருமணத்தில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்த ஜெயராமன் பிள்ளை தான் திருமண நிகழ்ச்சியில் படம்பிடிக்க பொறுப்பேற்றுள்ளார்.
மேலும் சினிமா நட்சத்திரங்களுக்கு ஆடைகள் வடிவமைக்க சந்தனா சந்தா தான் அமைச்சர் ஸ்ரீராமுலு மகளின் ஆடைகள் வடிவமைக்கும் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக கட்சியில் இருந்து விலகி உள்ள கர்நாடக அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கடந்த 2016 -ம் ஆண்டு தனது மகள் பிரம்மனியின் திருமணத்தை ரூ.550 கோடி செலவில் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திருமண ஏற்பாடுகள் கடந்த மாதம் பிப்ரவரி 27 -ம் தேதி தொடங்கிய வரும் மார்ச் 5 -ம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…