HMPV தொற்று எதிரொலி: கர்நாடகாவில் முகக்கவசம் அணிவது கட்டாயம்.!
HMPV வைரஸ் பாதிப்பை தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என கர்நாடகா அரசு அறிவுறுத்தியுள்ளது.
கர்நாடகா: சினாவில் பரவி வரும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சளி, இருமல், தொண்டை எரிச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்றவை இதன் அறிகுறியாகும்.
அந்த வகையில், இன்று காலையில் முதலாவதாக கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் 2 கை குழந்தைகளுக்கு இந்த HMPV தொற்று கண்டறியப்பட்டது. பின்னர், ஜராத் மாநிலம் அகமதாபாத்திலும் ஒரு குழந்தைக்கு HMPV தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து, சென்னையில் 2 குழந்தைகளுக்கும் இந்த புதிய HMPV வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், HMPV வைரஸ் பரவல் எதிரொலியாக இந்தியாவிலேயே முதல் மாநிலமாக கர்நாடகாவில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அம்மாநிலத்தில் 2 குழந்தைகளுக்கு HMPV தொற்று உறுதியான நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது இடங்களுக்கு செல்லும்போது மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனால், “தற்போதைய சூழல் அவசர நிலை இல்லை என்பதால், மக்கள் பீதியடைய தேவையில்லை” என அம்மாநில சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், வைரஸ் பரவலை பொறுத்து மற்ற மாநிலங்களிலும் சில கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.