விவசாய சங்க பிரநிதிகள், மேஜையில் வெற்றி பெறுவோம் அல்லது உயிரை விடுவோம் என்ற வாசகத்தை எழுத்துவைத்துள்ளனர்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களி திரும்பப்பெற வலியுறுத்தி கிட்டத்தட்ட 40 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் கடும் குளிர், மழை எதையும் பார்க்காமல் தொடர்ந்து 44-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று வருகின்றனர். புதிய சட்டங்களை திரும்ப பெறுதல், குறைந்த ஆதார விலையை உறுதிப்படுத்துதல் போன்றவைகள் விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது
மத்திய அரசு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் இதுவரை நடந்த 7 கட்ட பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை. இன்று டெல்லியில் மீண்டும் விவசாயிகள் – மத்திய அரசுக்கு இடையேயான 8ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதுவும் தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல் ஆகியோர் பங்கேற்றனர். இதனிடையே, மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ள விவசாய சங்க பிரநிதிகள், மேஜையில் வெற்றி பெறுவோம் அல்லது உயிரை விடுவோம் என்ற வாசகத்தை எழுதி வைத்துள்ளது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…