மேகதாதுவில் அணை கட்டும் பணியை விரைவில் தொடங்குவோம் – கர்நாடகா முதல்வர்

Default Image

தமிழக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக அண்மையில் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, கர்நாடக அரசின் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்று  வலியுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் டெல்லி சென்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களை சந்தித்து மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக பேசினார்.

இந்நிலையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் மேகதாது விவகாரம் தொடர்பாக மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்டியே தீருவோம் என பிடிவாதமாக இருந்து வந்த நிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மத்திய  ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மத்திய  அரசிடம் அனைத்து கோரிக்கைகளையும் மனுவாக கொடுத்துள்ளோம் என்றும், மேகதாதுவில் அணை கட்டும் பணியை விரைவில் தொடங்குவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்