தீவிரவாதத்தை அடியோடு வேரறுப்போம் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
நேற்று காஷ்மீரில் உள்ள ஜம்மு-வில் இருந்து 78 வாகனங்களில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் ஸ்ரீநகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் அவர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து, வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனையில் ஆளுநர் சத்யபால் மாலிக், ஆலோசகர் விஜயகுமார் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
இதன் பின்னர் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், தீவிரவாதத்தை அடியோடு வேரறுப்போம்.உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும்.இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை மாநில அரசுகள் செய்ய வேண்டும்.குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து தண்டிப்போம் என்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…