‘அக்னிவீரர்களை நாங்கள் அங்கீகரிப்போம்’ – டாடா குழும தலைவர் சந்திரசேகரன்
அக்கினி வீரர்களின் செயல் திறனை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு தொழில் துறையில் சிறந்த வாய்ப்புகளை வழங்கும் திட்டம் என டாடா குழும தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்த அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பல்வேறு எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், இளைஞர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இப்போராட்டம் வடமாநிலங்களில் தீவிரமடைந்துள்ள நிலையில், போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்தி வருகின்றனர்.
ரயில்களுக்கு தீ வைப்பது மட்டுமல்லாமல், பாஜக தலைவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் சூறையாடப்பட்டுள்ளன. இதுகுறித்து, டாடா குழும தலைவர் சந்திரசேகரன் கூறுகையில், அக்கினி வீரர்களின் செயல் திறனை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு தொழில் துறையில் சிறந்த வாய்ப்புகளை வழங்கும் திட்டம். ராணுவத்தில் இணையும் இளைஞர்களுக்கு தேசத்தை பாதுகாப்பதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக மட்டுமல்லாமல், மிகவும் ஒழுக்கமான பயிற்சி பெற்ற இளைஞர்களை தொழில்துறைக்கு அடையாளம் காட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.