பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அதானி பிரச்னையை எழுப்புவோம்- கார்கே
பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அதானி பிரச்னையை எழுப்ப உள்ளதாக காங்கிரஸ் கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.
இன்று காலை பாராளுமன்ற அவையில் மத்திய பட்ஜெட் 2023-24க்கான தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது எதிர்க்கட்சிகள் அதானி பங்குகள் விவகாரத்தை எழுப்பும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார். மேலும் 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர், நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடங்கியது.
இதன்பின், பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று 2023-24 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்தார். இந்த பொருளாதார ஆய்வறிக்கையில், மத்திய அரசு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய தவறிவிட்டதாக குற்றம் சாட்டிய கார்கே, அரசாங்கம் எப்போதுமே உயர்ந்த கூற்றுக்களை கூறுகிறது, அவை அனைத்தும் பொய் தான் என கார்கே கூறினார்.
மேலும் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், அதானி விவகாரம், எல்லையில் சீனாவின் அத்துமீறல்கள் ஆகியவை குறித்தும், ஒருவருக்கொருவர் போட்டி போட்டுகொண்டு பிரதமர் மோடிக்கு விசுவாசம் காட்டும் ஆளுநர்களின் பங்குகள் என்ன என்பதையும் எதிர்க்கட்சிகள் எழுப்பும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
Congress president Mallikarjun Kharge says Opposition will raise during Budget session Adani issue, Chinese transgressions at border and role of governors who are “competing with each other to show loyalty” to PM Narendra Modi
— Press Trust of India (@PTI_News) January 31, 2023