தூய்மையான, ஊழலற்ற ஆட்சியை வழங்குவோம்..! பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி பேச்சு..!
கர்நாடகா மக்களுக்கு ஊழலற்ற ஆட்சியை வழங்குவோம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, புதிய முதல்வராக சித்தராமையாவை அறிவித்தது. அதே போல துணை முதல்வராக டி.கே.சிவகுமார் அறிவிக்கப்பட்டார். இவர்களுக்கான பதவியேற்பு விழா இன்று பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் ராகுல்காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் இதில் பங்கேற்றனர். கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக சிவக்குமாரும் பதவியேற்றுக் கொண்ட பிறகு பேசிய ராகுல்காந்தி வெறுப்பு அழிந்தது, அன்பு வென்றது என்று கூறினார்.
மேலும், மக்களுக்கான தூய்மையான, ஊழலற்ற ஆட்சியை வழங்குவோம் என்றும் பாரதிய ஜனதா கட்சியிடம் பணம் பலம், போலீஸ் பலம் என அனைத்து அதிகாரங்களும் இருந்தது ஆனால், கர்நாடக மக்கள் அந்த அதிகாரங்களை தோற்கடித்தனர் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
#WATCH | Bengaluru | “Nafrat ko mitaya, Mohabbat jeeti,” says Congress leader Rahul Gandhi after the swearing-in ceremony of the newly-elected Karnataka Government. pic.twitter.com/imwoC8HowV
— ANI (@ANI) May 20, 2023