பெண்ணினம் என்பது மெல்லினம் அல்ல வல்லினம் என்பதை நிரூபிப்போம் – தமிழிசை
தேசிய பெண்குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பெண்ணினம் என்பது மெல்லினம் அல்ல வல்லினம் என்பதை நிரூபிப்போம் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ட்வீட்.
கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஜனவரி 24-ஆம் தேதி தேசிய பெண்குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், ‘பெண்ணினம் என்பது மெல்லினம் அல்ல வல்லினம் என்பதை இந்த சமூகம் நிரூபிப்பதற்கு அடித்தளமாக இந்த சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தில் உறுதியேற்போம்.
பால் கொடுத்து வளர்க்கும் பெண் குழந்தைகள் பாலின தொந்தரவிற்கு ஆளாகாமல் பாதுகாப்பை இந்த சமூகம் வழங்க வேண்டுமென உறுதியேற்போம். புதிய இந்தியாவை படைப்பதில் பெண்களின் பங்கு இருப்பதை உறுதியேற்போம். அனைவருக்கும் சர்வதேச பெண் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
புதிய இந்தியாவை படைப்பதில் பெண்களின் பங்கு இருப்பதை உறுதியேற்போம்.
அனைவருக்கும் சர்வதேச பெண் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்.(2/2)#NationalGirlChildDay#NationalGirlchildDay2022
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) January 24, 2022