Categories: இந்தியா

ஜூலை மாதம் முழு பட்ஜெட்டை நாங்கள் தாக்கல் செய்வோம்-நிர்மலா சீதாராமன்.!

Published by
murugan

மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மத்திய அரசு நடப்பு நிதி ஆண்டிடு செலவினங்களுக்காக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 6-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். பட்ஜெட்டை தாக்கல் செய்த பின்  நிர்மலா சீதாராமன் ஆற்றிய உரையில், பாஜக ஆட்சி அமைத்த பிறகு இந்திய பொருளாதாரம் ஊக்கம் பெற்றது.

கடந்த 10 ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் பெரும் பாய்ச்சலில் முன்னேறி வருகிறது. பிரதமர் மோடியின் பல்வேறு திட்டங்களால் நாடு பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. வளர்ச்சியின் பயன்கள் ஏழை, எளிய மக்களை அடையத் தொடங்கியுள்ளன. நாட்டில் 4 பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. விவசாயிகள், ஏழைகள்,பெண்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

பெண்களுக்கான இட ஒதுக்கீடு, முத்தலாக் தடைச் சட்டம், கிராமப்புறங்களில் 70% ஆன வீடுகள் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பெண்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. ரேஷனில் இலவச உணவுப்பொருள் கொடுத்ததன் மூலம் உணவுக்கான கவலையை போக்கிவிட்டோம். 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம். 34 லட்சம் கோடி உதவித்தொகை நேரடியாக ஏழை மக்களின் ஜன்தன் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!

நாட்டின் அனைத்து தரப்பினருக்கும் சமமான வளர்ச்சி என்பதை மந்திரமாக கொண்டு செயல்பட்டு வருகிறோம். 2047ல் புதிய இந்தியாவை படைப்போம். சமூகநீதியே பாஜக அரசின் பிரதான நோக்கம். ஊழல் ஒழிப்பு என்பதும் வாரிசு அரசியல் ஒழிப்பது என்பதையும் வெளிப்படைத் தன்மையுடன் செய்து வருகிறோம் எனவும் தெரிவித்தார்.

எங்களின் வளர்ச்சிப் பணிகளுக்காக மக்கள் எங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவர் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும்  ஜூலை மாதம் முழு பட்ஜெட்டை நாங்கள் தாக்கல் செய்வோம் என கூறினார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 57 நிமிடங்களில் பட்ஜெட் உரையை முடித்தார். இதையடுத்து, நாளை காலை 11 மணிவரை மக்களவையை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் ஓம்.பிர்லா தெரிவித்தார்.

 

Recent Posts

மாணவர்களை கால் அழுத்திவிட கூறிய ஆசிரியர்! சஸ்பெண்ட் செய்த கல்வி அதிகாரி!

சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…

35 minutes ago

நாளை தவெக தலைவர் விஜய் வைக்கும் விருந்து! யார் யாருக்கு தெரியுமா?

சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…

1 hour ago

“மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

1 hour ago

அதானி குழுமத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் ‘இனவெறி’ புகார்!

ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…

2 hours ago

இரண்டாம் முறையாக கர்ப்பமான சிம்பு பட நடிகை.! சனா கானுக்கு குவியும் வாழ்த்துக்கள்…

சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…

2 hours ago

INDvAUS: முதல் நாளில் செக் வைத்த ஆஸ்திரேலியா… தரமான பதிலடி கொடுத்த இந்தியா!

பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…

2 hours ago