ஊழியர்களை நீக்கமாட்டோம்,ஆனால் ஊதிய உயர்வு கிடையாது-டிசிஎஸ் நிறுவனம்
ஊழியர்களை பணியை விட்டு நீக்கமாட்டோம் என்று டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் கோபிநாதன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதன் விளைவாக உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார சரிவை சந்தித்து வருகிறது.இதில் இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல.இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு காரணமாக தொழில்துறை முடங்கியுள்ளதால் அந்த தொழிற்சாலைகள் கடும் பொருளாதார சரிவை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் இந்தியாவின் பிரபல நிறுவனமான டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் கோபிநாதன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,நடப்பு நிதியாண்டின் 2 காலாண்டுகளும் மிகவும் கடினமாக இருக்கும்.தற்போதைய நிலவரப்படி ஊழியர்களை வேலையைவிட்டு அனுப்பும் எண்ணம் இல்லை.மேலும் இந்த ஆண்டு ஊதிய உயர்வு வழங்கப்படமாட்டாது.