மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்!!சிஆர்பிஎப் சபதம்
மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம் என்று சிஆர்பிஎப் தெரிவித்துள்ளது.
நேற்று காஷ்மீரில் உள்ள ஜம்மு-வில் இருந்து 78 வாகனங்களில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் ஸ்ரீநகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் அவர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து, வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
WE WILL NOT FORGET, WE WILL NOT FORGIVE:We salute our martyrs of Pulwama attack and stand with the families of our martyr brothers. This heinous attack will be avenged. pic.twitter.com/jRqKCcW7u8
— ????????CRPF???????? (@crpfindia) February 15, 2019
இந்நிலையில் சி.ஆர்.பி.எப் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளது.அதில்,மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்.புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த தியாகிகளுக்கு மரியாதைகள், அவர்களின் குடும்பத்திற்கு நாங்கள் துணை நிற்போம். இந்த கொடூர தாக்குதலுக்கு பழிதீர்க்கப்படும் என்று சபதத்துடன் பதிவிடப்பட்டுள்ளது.