கோழைத்தனமான தாக்குதலை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம் – பிரதமர் மோடி ட்வீட்
நாடாளுமன்றத்தை பாதுகாக்க உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு தேசம் அஞ்சலி செலுத்துகிறது என்று பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2001-ம் ஆண்டு டெல்லி நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த பயங்கரவாதிகள், துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளை கொண்டு பயங்கர தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 8 பாதுகாப்புப் படையினர், ஒரு தோட்டக்காரர் என மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். பின்னர் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 5 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலின் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட அப்சல் குரு கடந்த 2013-ம் ஆண்டு, பிப்ரவரி 9-ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இதே நாளில் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், 2001-ல் இந்த நாளில் எங்கள் பாராளுமன்றத்தின் மீதான கோழைத்தனமான தாக்குதலை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம். பாராளுமன்றத்தை பாதுகாக்க உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு தேசம் அஞ்சலி செலுத்துகிறது. இந்தியா எப்போதும் அவர்களுக்கு நன்றியுடன் இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.
We will never forget the cowardly attack on our Parliament on this day in 2001. We recall the valour and sacrifice of those who lost their lives protecting our Parliament. India will always be thankful to them.
— Narendra Modi (@narendramodi) December 13, 2020