ஜூலை 1 முதல் ஓட்டுநர் உரிமம்,ஏடிஎம் கட்டணம் போன்றவைகளில் முக்கிய மாற்றங்கள்-தெரிந்து கொள்வோம்..!

Default Image

ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ள எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கான ஏடிஎம் கட்டணம்,ஓட்டுநர் உரிமம் புதிய விதி போன்றவை குறித்து தெரிந்து கொள்வோம்.

ஜூலை 1 ஆம் தேதி முதல்,ஓட்டுநர் உரிமம் மற்றும் வரிவிதிப்பு உள்ளிட்டவற்றில் சில முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன.அதன்படி,

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வாடிக்கையாளர்களுக்கான ஏடிஎம் கட்டணம்:

ஜூலை 1 ஆம் தேதி முதல், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்கள், ஏடிஎம் மூலமாக ஒரு மாதத்தில் நான்கு முறை மட்டுமே இலவசமாக பரிவர்த்தனைகள் மேற்கொள்ள முடியும்.அதற்கு மேல் உபயோகித்தால் கூடுதலாக ரூ .15 + ஜிஎஸ்டி கட்டணங்கள் செலுத்த வேண்டும்.

எல்பிஜி விகிதங்கள் நிர்ணயம்:

எண்ணெய் நிறுவனங்கள் சந்தை ஏற்ற இறக்கங்கள், தேவை மற்றும் விநியோக இடைவெளியின் படி,ஜூலை 1 முதல் ஒவ்வொரு பதினைந்து நாட்கள் இடைவெளியில் திரவ பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) அல்லது சமையலறை எரிவாயுவின் விலைகள் நிர்ணயிக்கப்படவுள்ளன.

வருமான வரி- விவாட் சே விஸ்வாஸ்:

மத்திய அரசானது ‘விவாட் சே விஸ்வாஸ்’ திட்டத்தின் கீழ் வருமான வரி செலுத்துவதற்கான கட்டணத்தை வட்டி இல்லாமல் ஜூன் 30 முதல் ஆகஸ்ட் 31 வரை இரண்டு மாதங்களுக்கு நீட்டித்தது.

ஓட்டுநர் உரிமம்:

ஓட்டுநர் உரிமத்தைப் பெற,இனி போக்குவரத்து அலுவலகத்திற்கு (RTO) செல்ல வேண்டியதில்லை.ஏனெனில், ஜூலை 1 முதல் புதிய விதிகளின்படி, இனி ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளிலே அதற்கான பயிற்சியை முடித்து விட்டு ஓட்டுநர் உரிமத்தைப் பெறலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்