நாட்டில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் – பிரதமர் உறுதி

PM Modi

நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என பிரதமர் பேச்சு.

கோவாவில் நடைபெற்ற ஜி20 எரிசக்தி துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக கலந்து கொண்டார். அப்போது பேசிய பிரதமர், பசுமை வளர்ச்சி மற்றும் ஆற்றல் மாற்றத்தில் இந்தியா பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியா அதிக மக்கள்தொகை கொண்ட நாடு மற்றும் உலகில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரம் நாடாகும்.

நாம் நமது காலநிலை உறுதிப்பாட்டில் வலுவாக முன்னேறி வருகிறோம். நாம் மின் திறன் இலக்கை 9 ஆண்டுகளுக்கு முன்பே அடைந்துள்ளோம். நாங்கள் இப்போது அதிக இலக்கை நிர்ணயித்துள்ளோம். 2030-ஆம் ஆண்டுக்குள் 50% திறனை அடைய திட்டமிட்டுள்ளோம். சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரத்தில் உலகளவில் இந்தியாவும் உள்ளது.

இந்தியாவில், கடந்த 9 ஆண்டுகளில் 19 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு வழங்கியுள்ளோம். நாட்டின் மூலை  முடுக்குகளில் உள்ள ஒவ்வொரு கிராமங்களுக்கும் மின்சாரத்தை கொண்டுபோய் சேர்த்துள்ளோம். அனைவரையும் உள்ளடக்கிய, சமமான மற்றும் நிலையான வளர்ச்சியே மத்திய அரசின் கொள்கை.

2015 ஆம் ஆண்டில், எல்இடி விளக்குகளைப் பயன்படுத்துவதற்கான திட்டத்தைத் தொடங்கினோம். இது உலகின் மிகப்பெரிய எல்இடி விநியோகத் திட்டமாக மாறியது. ஒவ்வொரு ஆண்டும் 45 பில்லியன் யூனிட்டுகளுக்கும் அதிகமான எரிசக்தியைச் சேமிக்கிறது. மேலும், நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலை கிடைத்திட நாடு முழுவதும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்