காவிரியில் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் 4-வது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றத்தை தொடர்ந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்த பின், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா. இவரது ராஜினாமாவை தொடர்ந்து கர்நாடகாவின் புதிய முதல்வராக பசுவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டு, சமீபத்தில் பதவியும் ஏற்றார்.
2 நாள் பயணமாக டெல்லி சென்ற கர்நாடகா முதல்வர் டெல்லி சென்றார். நேற்று அமித்ஷா மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்தார்.
இந்நிலையில், டெல்லி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பசுவராஜ் பொம்மை, மேகதாது விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவது பற்றி எனக்கு கவலையில்லை. காவிரியில் கர்நாடகாவுக்கு உரிமையுள்ளது. மேகதாது திட்டத்தை கொண்டு வந்தேதீருவோம் என தெரிவித்துள்ளார்.
காவிரியில் மேகதாது அணை கட்டக்கூடாது என தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்திவருகிறது. மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் பிரதமர் மோடிக்கு வலியுறுத்தி வருகிறார் எனபது குறிப்பிடத்தக்கது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…