மேகதாது அணையை கட்டியே தீருவோம் -கர்நாடகா முதல்வர்..!

Default Image

காவிரியில் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் 4-வது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றத்தை தொடர்ந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்த பின், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா. இவரது ராஜினாமாவை தொடர்ந்து கர்நாடகாவின் புதிய முதல்வராக பசுவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டு, சமீபத்தில் பதவியும் ஏற்றார்.

2 நாள் பயணமாக டெல்லி சென்ற கர்நாடகா முதல்வர் டெல்லி சென்றார். நேற்று அமித்ஷா மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்தார்.

இந்நிலையில், டெல்லி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பசுவராஜ் பொம்மை, மேகதாது விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவது பற்றி எனக்கு கவலையில்லை. காவிரியில் கர்நாடகாவுக்கு உரிமையுள்ளது. மேகதாது திட்டத்தை கொண்டு வந்தேதீருவோம் என தெரிவித்துள்ளார்.

காவிரியில் மேகதாது அணை கட்டக்கூடாது என தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்திவருகிறது. மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் பிரதமர் மோடிக்கு வலியுறுத்தி வருகிறார் எனபது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்