மத்திய அரசு திட்டங்களை சரியான நேரத்தில் முடிப்போம் – பிரதமருக்கு பீகார் முதல்வர் உறுதி.!
மத்திய அரசு திட்டங்களை சரியான நேரத்தில் முடிப்பதாக பீகார் முதல்வர் நிதீஷ் குமார், பிரதமருக்கு உறுதி அளித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் குடிநீர் விநியோகத் திட்டங்கள், கழிவுநீர் மேலாண்மை திட்டங்கள் மற்றும் ஆற்றுப்படுகை மேம்பாட்டு திட்டம் என மொத்தம் ரூ.541 கோடி மதிப்பிலான 7 வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி நேற்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்நிலையில், மத்திய அரசு திட்டங்களை சரியான நேரத்தில் முடிப்பதாக பீகார் முதல்வர் நிதீஷ் குமார், பிரதமருக்கு உறுதி அளித்துள்ளார்.
மேலும், நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் மிஷன் (AMRUT) மற்றும் மாநிலத்தில் உள்ள பிற திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் மத்திய அரசு திட்டங்களையும் இது துரிதப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார். பாட்னாவில் உள்ள பியூர் மற்றும் கர்மலிச்சக் ஆகிய இடங்களில் தலா ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை பிரதமர் திறந்து வைத்தார். இது நதி மாசுபடுவதைத் தடுக்க கங்கா நதியில் விடுவிப்பதற்கு முன்பு தண்ணீரை சுத்தப்படுத்தும்.
சாம்ரா மற்றும் சிவான் நகரத்திற்கான குடிநீர் விநியோகம் திட்டங்களையும் மோடி திறந்து வைத்தார், அங்கு AMRUT மிஷனின் கீழ் குடிநீர் வழங்களில் 81,000 பேர் பயனடைவார்கள் என்று முதல்வர் கூறியுள்ளார். இது தவிர, இரண்டு குடிநீர் விநியோகம் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய நிதீஷ் குமார், நங்காமி கங்கே திட்டத்தின் கீழ் கட்டப்படும் எஸ்.டி.பி.க்கள் குறிப்பாக கங்கை நதிகளை மாசுபடாமல் பாதுகாப்பது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.