ஈரானில் 52 முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் – டிரம்ப் எச்சரிக்கை.!
- கடந்த 3-ம் தேதி அமெரிக்க நடத்திய தாக்குதலில் தளபதிகளான சுலைமானி மற்றும் அபு மஹ்தாதி இருவர் இறந்தனர்.
- அமெரிக்காவை கண்டிப்பாக பழி வாங்குவோம் என ஈரான் வெளிப்படையாக கூறியுள்ளது.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 3-ம் தேதி அமெரிக்க படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் புரட்சி படையைச் சேர்ந்த முக்கிய தளபதிகளான சுலைமானி மற்றும் அபு மஹ்தாதி என்ற இரு தளபதிகள் மற்றும் 6 பேரும் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவின் இந்த தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. மேலும் அமெரிக்காவை கண்டிப்பாக பழி வாங்குவோம் என ஈரான் வெளிப்படையாக கூறியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ” ஈரான் பதில் தாக்குதல் நடத்தும் விதமாக அமெரிக்காவின் சொத்துகளைத் தாக்கப்போவதாக பேசிக் கொண்டிருக்கிறது. அப்படித் தாக்கப்பட்டால் பின்னர் எதிர்வினை மிக மோசமானதாக இருக்கும் எனவும் , ஈரானின் முக்கிய 52 இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்”என பதிவிட்டுள்ளார்.