கன்னட மக்களின் நலன் காக்க நாங்கள் எப்போதும் கைகோர்ப்போம்; சித்தராமையா.!

Siddharamiah KN

கர்நாடக மக்களின் நலன்களைக் காப்பதற்கு நாங்கள் எப்போதும் கைகோர்ப்போம் என சித்தராமையா உறுதி கூறியுள்ளார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையாக வெற்றி பெற்ற நிலையில், முதல்வர் பதவிக்கு சித்தராமையா, டிகே சிவகுமார் இடையே யார் முதல்வராக வேண்டும் என இழுபறி நீடித்து வந்த நிலையில், தற்போது முடிவு எட்டப்பட்டுள்ளது. கார்கே, ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்களை இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக முதல்வராக சித்தராமையாவை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கே.சி.வேணுகோபால் தெரிவித்தார். இந்த நிலையில், நாளை மறுநாள் மதியம் 12.30 மணிக்கு கர்நாடக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வரை டிகே சிவகுமாரும் பதவியேற்க உள்ளனர்.

இந்த நிலையில் முதல்வராக பதவியேயேற்கவுள்ள சித்தராமையா, கர்நாடக மக்களின் நலன்களைக் காக்க நாங்கள் எப்போதும் கைகோர்த்து பாடுபடுவோம். வெளிப்படையான மற்றும் ஊழலற்ற ஆட்சியை வழங்க, எங்களது உத்தரவாதங்களை செயல்படுத்துவதற்கும் காங்கிரஸ் கட்சியில் நாங்கள் ஒரு குடும்பமாக செயல்படுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.<

/p>

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்