பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்! 

நாங்கள் நாடாளுமன்ற வளாக நுழைவு வாயில் மூலமாக உள்ளே செல முயன்றோம். அப்போது பாஜக எம்பிக்கள் தான் எங்களை உள்ளே விடாமல் தடுத்தனர் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறினார்.

Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சி எம்பிக்கள் கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே போல, காங்கிரஸ் கட்சியினர் அமித்ஷா பேச்சை திரித்து கூறுவதாக பாஜக எம்பிகளும் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனை அடுத்து மக்களவையில் கடும் அமளி, அவை ஒத்திவைப்பு என நாடாளுமன்ற வளாகமே பரபரப்பாக இருக்கும் சூழலில், நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி கிழே விழுந்து தலையில் அடிபட்டது.

இந்த காயம் குறித்து அவர் ANI செய்தியாளர்களிடம் கூறுகையில், “நான் நாடாளுமன்ற வளாகத்தில் படிக்கட்டில் நின்று கொண்டிருந்தேன். அப்போது எனது அருகில் ராகுல் காந்தி இருந்தார். ராகுல் காந்தி அருகில் இருந்த ஒரு எம்பியை தள்ளிவிட்டார். அந்த எம்பி என்மீது விழுந்தார். அதனால் நான் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தேன்.” எனக்கூறினார். தற்போது அவர் டெல்லி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், ” இங்கு நடந்தது எல்லாம் உங்கள் கேமராவில் பதிவாகி இருக்கும். நாங்கள் நாடாளுமன்ற நுழைவு வாயில் வழியாக உள்ளே செல்ல முயன்றோம். அப்போது பாஜக எம்.பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தி, என்னைத் தள்ளி மிரட்ட முயன்றனர். அப்போது சிலர் எங்கள் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை உள்ளே செல்ல விடாமல் தள்ளினார். அப்போது அவரும் அவர்களை தள்ளி உள்ளே செல்ல முயன்றார். அப்போது இந்த சம்பவம் நடந்திருக்கலாம்.

இது தான் நாடாளுமன்ற நுழைவுவாயில். இதன் வழியாக உள்ளே செல்ல எங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால், பாஜக எம்பிக்கள் எங்களை உள்ளே செல்ல விடாமல் தடுக்க முயன்றனர். அவர்கள் அரசியல் சாசனத்தையே எதிர்க்கிறார்கள். ” என ராகுல் காந்தி விளக்கம் அளித்தார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PahalgamTerroristAttack live
Kashmir Attack
Go tell this to Modi
Sketches of terrorists
Terrorist Attack
j&k terror attack
trapped in Kashmir terror