டெல்லி: 18வது மக்களவை முதல் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை மக்களவை சபாநாயகரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி வேட்பாளரை ஒரேமனதாக தேர்வு செய்ய அக்கட்சி முயற்சி செய்தது.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் ஒருமித்த முடிவு எட்டப்படாத நிலையில், NDA கூட்டணி சார்பாக ஓம் பிர்லாவும், I.N.D.I.A கூட்டணி சார்பாக கே.சுரேஷும் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, காங்கிரஸ் எம்.பி கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” துணை சபாநாயகர் பொறுப்பை எதிர்கட்சிக்கு அவர்கள் (NDA) கூட்டணி தர சம்மதம் தெரிவித்தால் நாங்கள் NDA கூட்டணியின் சபாநாயகர் வேட்பாளருக்கு எங்கள் ஆதரவை தருகிறோம். நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்.
சபாநாயகர் விவகாரத்தில் எதிர்கட்சியையும் பாஜக கௌரவிக்க வேண்டும். இது தொடர்பாக முதலில் ராஜ்நாத் சிங் , மல்லிகார்ஜுன கார்கேவை அழைத்து பேசினார் என்று சபாநாயகர் விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்பி கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…