இந்த ஆண்டு ராக்ஷச பந்தனை இவர்களுடன் தான் கொண்டாட வேண்டும் – பிரதமர் மோடி
நேற்று முன்தினம் மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருடனும் தொடர்பு கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பிரதமர் மோடி பேசியிருந்தார். முத்தலாக்கை தடை செய்யும் அரசின் முடிவு முஸ்லிம் பெண்களின் ஒட்டுமொத்த பாதுகாப்பு உணர்வை உயர்த்தியுள்ளது.
இந்த நிலையில், இந்த ஆண்டு ரக்ஷா பந்தன் பண்டிகையை இந்தாண்டு இஸ்லாமிய பெண்களுடன் இணைந்து கொண்டாட வேண்டும் என NDA எம்.பி-க்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சில எம்பிக்கள் கூறுகையில், சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த பெண்களை சென்றடைவதற்கு ரக்ஷாபந்தனின் போது நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார் என தெரிவித்துள்ளனர்.