காவேரி நதியில் இருந்து தமிழகத்திற்கு கர்நாடக அரசு தரவேண்டிய தண்ணீரை தர வலியுறுத்தி தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டது. அண்மையில் நடைபெற்ற காவேரி ஒழுங்காற்று குழு ஆலோசனை கூட்டம், காவேரி மேலாண்மை வாரிய ஆலோசனை கூட்டத்திலும் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தியது.
இதனை தொடர்ந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் வீதம் 15 நாட்களுக்கு தொடர்ந்து திறந்துவிட வேண்டும் என காவேரி மேலாண்மை வாரியம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், இதற்கு கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்தது. தங்களிடம் போதிய அளவு தண்ணீர் இல்லை என விளக்கம் அளித்தது
இந்நிலையில், இன்று கர்நாடகா மற்றும் தமிழகம் இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனை தொடர்பாக டெல்லியில் உள்ள கர்நாடக பவனில் கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் சட்ட வல்லுநர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய டிகே சிவக்குமார் , ‘ இன்று, நாங்கள் எங்கள் சட்ட வல்லுனர்களை சந்தித்து ஆலோசித்தோம். 5,000 கனஅடி தண்ணீர் திறக்க காவேரி மேலாண்மை வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் எங்களிடம் போதிய அளவு தண்ணீர் இல்லை என்பதே உண்மை.
கர்நாடகாவில் போதிய அளவு மழை பெய்யவில்லை. கர்நாடக விவசாயிகளின் உணர்வுகளுக்கு தமிழக விவசாயிகள் மதிப்பளிப்பார்கள் என்று நம்புகிறேன். நாங்களும் தமிழக விவசாயிகளை மதிக்கிறோம். . இதனை தீர்க்க ஒரே வழி காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது மட்டுமே. கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவது என்பது தமிழகத்திற்கும் உதவும் என்பதே எங்கள் கருத்து என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…
இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…
சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…