நமது வரலாற்றை புரிந்து கொள்ள இந்தியை கற்க வேண்டும் – அமித்ஷா
உள்ளூர் மொழிகளும், இந்தி மொழியும் நமது கலாச்சார ஓட்டத்தின் முதன்மையானவை என அமைச்சர் அமித்ஷா பேச்சு.
நமது கலாச்சாரம், வரலாற்றின் ஆன்மாவை புரிந்துகொள்ள நமது அலுவல் மொழியான இந்தியை கற்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்று வரும் இந்தி தின நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, உள்ளூர் மொழிகளும், இந்தி மொழியும் நமது கலாச்சார ஓட்டத்தின் முதன்மையானவை. நமது கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் ஆன்மாவைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், நாம் அதிகாரப்பூர்வ மொழியான இந்தியை கற்க வேண்டும்.
ஒவ்வொரு மொழியையும் நாம் பலப்படுத்துவதன் மூலம் அலுவல் மொழியான இந்தியையும் நாம் பலப்படுத்த முடியும். இவற்றைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், நமது உள்ளூர் மொழிகளை வலுப்படுத்த வேண்டும். நாட்டின் ஆட்சி நிர்வாகம், ஆராய்ச்சி ஆகியவை நம் உள்ளூர் மொழி மற்றும் அலுவல் மொழிகளில் நடக்க உறுதி ஏற்க வேண்டும். ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட மொழிகளின் தாழ்வு மனப்பான்மையை, அலுவல் மொழியும், உள்ளூர் மொழிகளும் ஒன்று சேர்ந்து அகற்றும். அதற்கான நேரம் வந்துவிட்டது என்றும் கூறினார்.