ஜம்மு காஷ்மீர் மக்களிைடயே தேசபக்தியை வளர்க்கவேண்டும் என மோகன் பாகவத் வலியுறுத்தினார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் நேற்று முன்தினம் 4 நாட்கள் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று ஆர்எஸ்எஸ் அலுவலகமான கேசவ் பவனில் நிர்வாகிகளை சந்தித்த மோகன் பாகவத் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் ஆர்எஸ்எஸ் செய்தித்தொடர்பாளர் பேசியபோது, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் மாநிலத்தின் வளர்ச்சி, மக்களிடையே ஒற்றுமையை உருவாக்குதல், தேசபக்தியை வளர்த்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார்.
மேலும், ஜம்மு காஷ்மீர் மக்களிைடயே தேசபக்தியை வளர்க்கவேண்டும் என வலியுறுத்தினார். பல்வேறு பகுதிகளிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பைக் கொண்டு செல்ல வேண்டும். ஆர்எஸ்எஸ் வலுவாக இருக்கும் கதுவா பகுதியில் புதியகிளைகளை உருவாக்க கேட்டுக்கொண்டார். ஆர்எஸ்எஸ் தத்துவங்கள் காஷ்மீரில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு செல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் எனத் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின் முதல்முறையாக மோகன் பாகவத் பயணம் மேற்கொள்ளண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்பால் : கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மைத்தேயி சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே…
சென்னை : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முதலில்…
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…