பாதுகாப்பு துறையில் தன்னிறைவு பெற வேண்டும் – பிரதமர் மோடி

உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், இது உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தற்போதைய உலகளாவிய சூழலில் இந்தியாவின் பாதுகாப்பு தயார் நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி அவர்கள் பேசுகையில், பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, பொருளாதார மேம்படுத்தும் என்றும், மேலும் பாதுகாப்புத்துறையில் இந்தியாவை தன்னிறைவு பெறச் செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025