இந்தியாவுடன் நட்பாக இருக்கவே விரும்புகிறோம்.! அமைதியை நாடும் தாலிபான்கள்.!
ஆப்கானிஸ்தான் தேச நலனுக்காக இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடனான பரஸ்பர நட்புறவை மேற்கொள்ளவே தாலிபான் அமைப்பினர் விரும்புகின்றனராம்.
தீவிர அமைப்பாக இருந்து வரும் தாலிபான் அமைப்பினர் அண்மை காலமாக அமைதி குறித்து பல்வேறு நாடுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதே போல இந்தியாவை பற்றியும் அந்த அமைப்பினர் நல்ல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்/
அதன் படி, ஆப்கானிஸ்தானை பூரணமைப்பதில் இந்திய அரசின் ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது எனவும், ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமிக்கப்பட்டு வரும் அந்நியர்களை எதிர்த்து தான் நாங்கள் போராடி வருகிறோம் எனவும் தாலிபான் அமைப்பு அரசியல் செய்தி தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் தெரிவித்தார்.
தங்கள் தேச நலனுக்காக இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடனான பரஸ்பர நட்புறவை மேற்கொள்ளவே தாலிபான் அமைப்பு விரும்புவதாகவும் அந்த அமைப்பின் அரசியல் செய்தி தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் தெரிவித்தார்.