வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய சங்கங்கள் உள்ளிட்டோர் தரப்பில் வழக்கு தொடுத்திருந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியாது என மத்திய அரசு கூறி நிலையில்,இன்று நடந்த விசாரணையில் 3 வேளாண் சட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியுமா..? என மீண்டும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து, மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே வேணுகோபால் வேளாண் சட்டங்களை நிறுத்தி வைப்பது குறித்து மத்திய அரசின் கேட்டு செல்லுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், சட்டத்தை நிறுத்தி வைத்து குழு அமைக்க எங்களுக்கு அதிகாரம் உண்டு , உச்சநீதிமன்றம் நியமிக்கும் குழுவை யாரும் தடுக்க முடியாது. நீதிமன்றம் பிறப்பிக்கவுள்ள இடைக்கால உத்தரவில் விவசாய நிலங்கள் பாதுகாக்க உறுதி செய்யப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நேற்று நடந்த விசாரணையில், வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு தயாரா..? என்று கேள்வி எழுப்பியதை தொடர்ந்து, வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தினால் நாங்கள் விவசாயிகளுடன் பேச குழு அமைக்கிறோம் என்று உச்சநீதிமன்றம் கூறியது.
விவசாய சட்டங்களை மத்திய அரசு நிறுத்தி வைக்க முடிவு எடுக்காவிடில், நீதிமன்றம் நிறுத்தி வைக்கும் என்றும் கூறியது. வேளாண் சட்டங்கள் நல்லது என்று ஒருவர் கூட வழக்கு தொடரவில்லை, புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்தியே தீருவோம் என மத்திய அரசு நினைப்பது ஏன் என்று தெரியவில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது என்பது குறிப்பிடத்த்தக்கது.
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…