பிரதமர் மோடி தனது நடவடிக்கையால் கோவிட்-க்கு உதவி செய்துள்ளார். எனவே அதற்கு ‘மோவிட்’ பெயரிட்டுள்ளோம்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை கொரோனா வைரசால் மக்கள் பாதிக்கப்படுவதற்கு அவர் தான் காரணம் என்று விமர்சித்து வருகிறார்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், நாங்கள் கோவிட்-19-க்கு மோவிட் என பெயரிட்டுள்ளோம். ஏனெனில் மோடி நடவடிக்கை எடுத்திருந்தால் அது கோவிட்-ஆக மட்டுமே இருந்திருக்கும். ஆனால் பிரதமர் மோடி தனது நடவடிக்கையால் கோவிட்-க்கு உதவி செய்துள்ளார். எனவே அதற்கு ‘மோவிட்’ பெயரிட்டுள்ளோம். மேற்கு வங்கத்தில் கூட்டங்களை ஏற்பாடு செய்வதன் மூலம் பிரதமர் கொரோனா வைரஸ் பரவ வகுத்தார் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம். நான் கொரோனா தொற்றுநோய் குறித்து பலமுறை மத்திய அரசை எச்சரித்துள்ளோம். ஆனால் இதை மத்திய அரசு சற்றும் பொருட்படுத்தவில்லை. மேலும், 130 கோடி மக்களில், மூன்று சதவீதத்தினர் மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர் எனக் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…
சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும்…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
அலகாபாத்: குக்கு வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா…