இந்தியாவில் 90 லட்சம் படுக்கைகள் தயாராக இருக்கிறது – பிரதமர் மோடி
இந்தியாவில் 90 லட்சம் படுக்கைகள் தயாராக இருக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா காலக்கட்டத்தில் பிரதமர் மோடி ஏழாவது முறையாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார். டெல்லியில் இருந்து காணொலி மூலம் பிரதமர் உரையாற்றினார்.அவரது உரையில்,கொரோனா தொற்றிலிருந்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.கொரோனா சிகிச்சைக்கு இந்தியாவில் 90 லட்சம் படுக்கைகள் தயாராக இருக்கிறது .எனவே மக்கள் அச்சப்படத் தேவையில்லை.நாடு முழுவதும் கொரோனா பரிசோதனைக்கு 2,000 ஆய்வகங்களும், சிகிச்சைக்கு பல லட்சம் மையங்களும் உள்ளது.ஊரடங்கு தளர்வு இருந்தாலும், ஆனால் வைரஸ் இன்னமும் இருக்கிறது என்பதை நாம் அனைவரும் மறந்து விடக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.