நாங்கள் இந்தியாவில் பசுமை ஆற்றலில் கவனம் செலுத்துகிறோம்.! பி20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி
டெல்லியில் நடைபெற்ற பி20 உச்சி மாநாட்டில், “நாங்கள் இந்தியாவில் பசுமை ஆற்றலில் கவனம் செலுத்துகிறோம். பசுமை ஹைட்ரஜன் துறையில் சூரிய ஆற்றலின் வெற்றியைப் பிரதிபலிக்க நாங்கள் இலக்கு வைத்துள்ளோம்” என்று பிரதமர் மோடி கூறினார்.
“இந்த மாநாடு மாற்றத்திற்கு வழி வகுத்துள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன். இணைக்கப்பட்ட உலகம் என்பது தொழில்நுட்பம் மூலம் இணைப்பது மட்டுமல்ல, அது பகிரப்பட்ட நோக்கம், கிரகம், செழிப்பு மற்றும் எதிர்காலம் பற்றியது” என்றார்.