ஆரோக்கிய சேது செயலியை யார் உருவாக்கியது என்று தெரியாது – மத்திய மின்னணு அமைச்சகம் அதிரடி பதில்!
ஆரோக்கிய சேது செயலியை யார் உருவாக்கியது என்று தமக்கு தெரியாது என மத்திய மின்னணு அமைச்சகம் அதிரடியாக பதிலளித்துள்ளது.
கொரோனா பரவலை கண்காணிக்க மத்திய அரசு, “ஆரோக்கிய சேது” என்ற செயலியை அறிமுகம் செய்தது. இந்த செயலி, நமது ஸ்மார்ட்போனில் இருந்தால், அருகில் வரும் மற்றொரு ஆரோக்கிய சேது பயன்பாட்டாளரின் உடல் நலத்தை பற்றிய அறிவிப்பை நமது அலைபேசியில் பெறலாம் என்று கூறப்பட்டது. அதுமட்டுமின்றி, அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவராக இருந்தால், அது நமக்கு எச்சரிக்கை தரும்.
மேலும் அந்த கொரோனா நோயாளி, எங்கெல்லாம் சென்றிருக்கிறார் என்றும், அவர் மூலம் யாருக்கெல்லாம் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அறிந்து, அவர்களை தனிமைப்படுத்த இந்த செயலி உதவும். இது போன்று பல நன்மைகளை கொண்ட ஆரோக்கிய சேது செயலி குறித்து குற்றசாட்டுகள் எழுந்த போது அதனை குறித்து தகவலறியும் உரிமை சட்டத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டது . இந்த நிலையில் தற்போது அந்த கேள்விகளுக்கு மத்திய மின்னியல் அமைச்சகம் அளித்த பதிலில், யாரால் இந்த ஆரோக்கிய சேது செயலி உருவாக்கப்பட்டது என்பது தெரியாது என்று தெரிவித்துள்ளது.