கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்குவது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன் மத்திய அரசு கூறுகையில், கொரோனா இழப்பீடு வழங்குவத்தில் நிறைய சட்ட சிக்கல் உள்ளது. மருத்துவர்கள் நிறையபேர் போலி சான்றிதழ்கள் வாங்குவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, கொரோனா இழப்பீடு பெறுவதற்கு போலி சான்றிதழ்கள் தரப்படுவதாக வரக்கூடிய தகவல்கள் கவலையளிக்கிறது.
நமது ஒழுங்கு இவ்வளவு தூரம் தாழ்ந்து போகும் என நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை. கொரோனா இழப்பீடு பெற போலி ஆவணம் தருவது பற்றி விசாரிக்க உத்தரவிடவேண்டியது அவசியமாகிறது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்றே கூறினோம். குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என கூறவில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், இந்த வழக்கை வருகின்ற திங்கள்கிழமை ஒத்தி வைப்பதாகவும், அன்றைய தினம் விரிவாக விசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…