ஆசாத் மீதான தாக்குதலை கண்டிக்கிறோம்..! பீம் ஆர்மி தலைவரை சந்தித்தபின் மல்யுத்த வீரர்கள்..!

WrestlersmeetAazad

பீம் ஆர்மி தலைவர் மீதான தாக்குதலை கண்டிப்பதாக மல்யுத்த வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் ராவன் நேற்று உத்தரப்பிரதேசத்தில் சஹாரன்பூர் எனும் ஊரில் தனது கட்சி நிர்வாகி வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு தியோபந் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது ஒரு கும்பல் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.

அவரை குறிவைத்து நடந்த இந்த துப்பாக்கி சூட்டில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்தப்பினார். இருந்தும் வயிற்றில் ஒரு குண்டு பாய்ந்துள்ளது. இதனால் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக தியோபந்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

பின்னர் அங்கிருந்து மருத்துவ மேல் சிகிச்சைக்காக சஹாரன்பூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா மற்றும் சாக்ஷி மாலிக் ஆகியோர் தலித் தலைவரும் பீம் ஆர்மி தலைவருமான சந்திர சேகர் ஆசாத்தை மருத்துவமனையில் சந்தித்துள்ளனர்.

இதன்பின், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, ஆசாத் மீதான தாக்குதலை கண்டிக்கிறோம். உண்மைக்காக நிற்கும் இவரைப் போன்றவர்கள் தாக்கப்படுவது தவறு. மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும், குற்றவாளிகளை கைது செய்ய காவல்துறையினரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன் என்றும் ANI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்