தாகீர் உசேன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் – டெல்லி கமிஷ்னர்
டெல்லியில் சிஏஏ.,க்கு ஆதரவாகவும், எதிராகவும் நடந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் 40-கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வன்முறையில் சாந்த் பக் ஏரியாவில், மத்திய உளவுத்துறையில் டிரைவராக இருந்த அங்கித் சர்மா என்பவர் கொலை செய்யப்பட்டு சாக்கடைக்குள் வீசப்பட்டார். இந்த சம்பவத்தில் ஆம் ஆத்மி கவுன்சிலர் தாகீர் உசேனுக்கு தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதன் விளைவாக தாகிர் உசைன் மீது சட்டப்பிரிவு 365 மற்றும் 302ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இதையடுத்து தாகீர் உசைன் ஆம் ஆத்மியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் தாகீர் உசேன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி கமிஷ்னர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.மேலும் விரைவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.