நாங்கள் ‘தெரு போராளிகள்’….! தேர்தல் ஆணையத்தின் உதவியின்றி பாஜக 50 இடங்கள் கூட தாண்டி இருக்காது….! – மம்தா

Default Image

தேர்தல் ஆணையம் இதற்கு உதவவில்லை என்றால் பாஜக 50 இடங்களை கூட தாண்டி இருக்காது.

மேற்கு வங்காளத்தில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி நேர்காணலின்போது, இந்திய தேர்தல் ஆணையத்தை அவதூறாக பேசியுள்ளார். அவர் கூறுகையில், தேர்தல் ஆணையம் பாஜகவின் செய்தி தொடர்பாளர் என்றும், தேர்தல் ஆணையத்தின் உதவியின்றி பாஜக 50 இருக்கைகளை கூட தாண்டி இருக்காது. தேர்தல் ஆணையம் இந்த முறை நடந்து கொண்ட விதம் கொடூரமானது.

இருந்தாலும், தேர்தலில் மம்தாவின் கட்சி இரட்டை சதத்தை தாண்டி வெற்றி பெற்றதற்கு குறித்து கேட்டபோது, நான் தெரு போராளி. ஆரம்பத்திலிருந்தே நாங்கள் இரட்டை சதம் அடிப்போம் என்றும், பாஜக எழுபதை தாண்டாது என்றும் சொன்னேன் மேலும், தேர்தல் ஆணையம் இதற்கு உதவவில்லை என்றால் பாஜக 50 இடங்களை கூட தாண்டி இருக்காது என கூறியுள்ளார்.

நந்திகிராம் தொகுதியில் மம்தாவின் தோல்வி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அங்கு வாக்கு எண்ணிக்கையையில் குளறுபடி நடந்துள்ளதால் தான் நாங்கள் தோல்வியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மறு வாக்கு எண்ணிக்கை நடத்துமாறு பரிசீலனை செய்துள்ளோம். ஆனால், அங்கு தோல்வி அடைந்தது குறித்து நான் வருத்தப்படவில்லை. நாங்கள் அதிகமான இடங்களை பெற்று தான் வெற்றி பெற்றுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

மேலும், சில இடங்களில், வாக்கு இயந்திரங்களில் கோளாறு மற்றும் பல அஞ்சல் வாக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் வங்காள மக்களுக்கு தங்கள் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், அவர்கள் வங்காளத்தை  மட்டுமல்ல, நாட்டையும் காப்பாற்றியுள்ளனர் என்றும், நாங்கள் தெரு போராளிகள் என்பதால்தான், எங்கள் கட்சி வென்றது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரிடம் கொரோனவை எவ்வாறு கையாள போகிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், மத்திய அரசு அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும் என்றும், சுகாதார நெருக்கடி காரணமாக எந்த ஒரு வெற்றிகரமான ஊர்வலங்களையும் எடுக்க வேண்டாம் என்றும் தங்கள் கட்சி முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்