மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம்- மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா..!

Arjun Munda

குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட வாக்குறுதிகளை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தொடத்துவோம் என சமீபத்தில் விவசாய சங்கங்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் விவசாய சங்க தலைவர் உடன் மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல் மற்றும் அர்ஜூன் முண்டா பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில்  இந்த முடிவும் எட்டப்படவில்லை, இதனால் திட்டமிட்டபடி டெல்லி போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் அறிவித்தனர். நேற்று முதல் பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசத்தில் இருந்து பஞ்சாப் கிசான் மஸ்தூர் சங்கம் உள்ளிட்ட சுமார் 200 விவசாய சங்கங்களை சார்ந்த 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் டெல்லி நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

கடந்த முறை போலவே இந்த முறையும் நீண்ட நாள் போராடும் நடக்கும் என்பதால் ஆறு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை டிராக்டர் மூலம் எடுத்துக்கொண்டு புறப்பட்டனர். மத்திய அரசு டெல்லி எல்லை பகுதியில் போலீசார் மற்றும் துணை இராணுவத்தை  குவித்து விவசாயிகளின் வருகையை  தடுத்து வருகின்றனர்.

இரவு பகலாக தடுப்புகள் அமைப்பு… டெல்லியை நோக்கி முன்னேற விவசாயிகள் தீவிரம்!

விவசாயிகள் டெல்லியில் உள்ளே நுழைவதை தடுக்கும் விதமாக குறிப்பிட்ட சில பாதைகளை தவிர மற்ற சாலையில் அனைத்தும் சிமெண்ட் தடுப்புகள், இரும்பு கம்பிகளை சாலையை பதித்தும், சாலையில்ஆணியை அடித்து தடுத்து வருகிறார்கள். நேற்று விவசாயிகள் டெல்லி நோக்கி திரண்டு வந்ததால் தடையை மீறி வர முயன்ற விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் போலீசார் கண்ணீர் புகை கொண்டு வீசினர்.

மேலும் பஞ்சாப், அரியானா மற்றும் உத்தர பிரதேச மாநில எல்லைகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் 2-வது நாளாக நடைபெற்று வருகிறது. இன்று செய்தியாளர்களிம் பேசிய மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா, “நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். அனைத்து தரப்புகளையும் கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். விவசாயிகள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை  நடத்துவதற்கான எங்கள் முயற்சிகள் தொடரும் என்று நான் ஏற்கனவே கூறியிருந்தேன் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்