“ஒரே நாடு,ஒரே தேர்தலை நடத்த தயார்” – இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,”ஒரு நாடு ஒரே தேர்தல்” மற்றும் “ஒரு நாடு,ஒரே வாக்காளர் பட்டியல்” குறித்து விவாதங்கள் நடக்கட்டும், அதன்மூலம் ஆரோக்கியமான கருத்துக்கள் வெளிவரட்டும்”,என்று முன்னதாக கூறியிருந்தார்.இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகள் எதிர்ப்பும்,சில கட்சிகள் ஆதரவும் தெரிவித்தன.
இதற்கிடையில்,உ.பி,கோவா,பஞ்சாப்,மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில்,ஒரே நாடு,ஒரே தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவதற்குத் தயாராக உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:”ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஒரு நல்ல பரிந்துரை, ஆனால் இதற்கு அரசியலமைப்பில் மாற்றம் தேவை.எனினும்,தேர்தல் ஆணையம் ஒரே நாடு ஒரே தேர்தலை (அனைத்துத் தேர்தல்களையும்) ஒரே நேரத்தில் நடத்துவதற்குத் தயாராக உள்ளது.அதன்படி, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தலை நடத்த தயாராக உள்ளோம்”,என்று தெரிவித்துள்ளார்.
One Nation One Election is a good suggestion but this needs a change in the Constitution. The Election Commission is fully geared up and is capable of holding all the elections simultaneously. We are ready to hold elections only once in 5 years: CEC Sushil Chandra pic.twitter.com/reixPOoqIl
— ANI (@ANI) March 10, 2022
‘