கொரோனா 3வது அலைக்கு தயாராகி வருகிறோம் – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள போதிய கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறோம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லியில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் கொரோனா மூன்றாவது அலையில் 30,000 பேர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டாலும் அதனை எதிர்கொள்ள போதிய கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறோம் எனவும் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நாடு முழுவதும் கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலை மிக மோசமாக தாக்கி வருகிறது. இதனால் நோயாளிகள் மருத்துவமனைகளை நாடுகின்றனர். நோயாளிகள் அதிகரிப்பால், ஆக்சிஜன் போன்ற மருத்துவ உபகரணங்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது.
இதில் தலைநகர் டெல்லியில் தான் நிலைமை மோசமாக உள்ளது. ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகள் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் உயிரிழந்து கொண்டியிருக்கின்றன. இந்த நெருக்கடியை சமாளிக்க முடியாமல் டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த இக்கட்டான சூழலில் கொரோனா மூன்றாவது அலைக்கு தயாராகுங்கள் என மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், மூன்றாவது அலையை எதிர்கொள்ள அரசு தயாராகி வருகிறது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.